Sunday, July 22, 2012

மறுபடியும்

என்னவளின் நினைவுகளும்
வானவனின் நிலவும் ஒன்றுதான்
இரண்டுமே தேய்ந்து மறைந்து
மீண்டும் வளர்ந்து மலர்கிறது
மறுபடியும் . . . . . . . . !!

ஆலமரம்

கதிரவன் கண் மலரும்
    பொன்வான ஒளியின் கீழ்
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும்
     நதியோர கரையோரம் !!
காதலால் வருடாமல் வருடி செல்லும்
    காற்றில் மெருகேற்றிய இசையின் கீதம் !!
வரும் திசை நோக்கிய பாதையில்
     சூரியனும் ஒளிகூட்ட
பலகிளைகள் தாலாட்ட
    பல பறவைகள் இசை மீட்ட
பல கைகள் மன்புதைந்து
   வான் தொட உயர்ந்து நிற்கும்
 ஆலமரம் !!

என் நினைவு தொட
என் உணர்வுக்கு எட்டும் உவமையாய்
என் அம்மை அப்பனே !!

கலாச்சாரம்

அன்பும் பண்பும்
நிறைந்த காதலாய் !!

இயற்கையின் மாற்றத்திற்கு
ஏற்ப வளைந்து - சுழற்சிக்கு
ஏற்ப மலர்ந்து  - உற்ற
காலத்தில் கனிந்து !!

மனித குலம் நிமிர்ந்து நிற்க
ஆணிவேராய் நம் கலாச்சாரம் !!

Wednesday, February 15, 2012

கற்பி

அவள் கற்பின் ஆழம் கண்டு 
அவள்  அழகிய நெற்றியினில் 
நிலைத்து நிற்கும் திலகமிட 
நில்லாது துடிக்கிறது என் கை பெருவிரல் 

அவள் பிரியமான பார்வை கண்டு
பிரியாமல் அவள் துணையாக 
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட 
ஏங்குது நெஞ்சம் 

இன்னமும் எத்தனை  எத்தனை 
கனவுகள் நெஞ்சினில் - இத்தனையும்
மொத்தமாய் தேங்கிய நினைவுகளாய் நிற்க 
அவள் மட்டும் பேசாமல் சென்று விட்டால் 
என் கனவுகளை கொல்லாமல் கொன்று விட்டால் 

வழியினில் கலைந்தது 
என் தூக்கம் மட்டும் அல்ல 
கனவினில் இருந்தும் தான் 
நிஜத்தினில் காதல் ???? 




Monday, November 21, 2011

காதல்_2

என் மனதில் ஏதோ ஒன்று

     வலியல்ல சுகமாய் நின்று

கொல்லாமல் கொல்லும் நெஞ்சம்
  
     துள்ளாமல் துள்ளி செல்லும் கொஞ்சம் !!


நெடுந்தூர பயணம் ஒன்றில்
  
     நிழலாக நினைவின் நிலவாய்

அவள் நின்ற வானம் எங்கும்

     துலையாமல் துலைந்தே போனேன் !!


நிலவுபோல் வந்தவள் - காற்றுபோல்
  
     நினைவினில் கலந்தவள் - சுவாசமாய்

மனதிலே மவுனமாய் நிறைந்தவள் - மேகமாய்

     கூந்தலில் வானவில் வரைந்தவள் !!


இதழ் என்ன தேன் துளி

     இமை என்ன மலர் விழி

இடையென்ன கொடியென

     எதுகையும் மோனையும் வருசைபடுத்தாவிடுனும் !!


அரவணைப்பில் சேயாகி
     
     கதகதப்பில் கணவனாகி

கலகலப்பில் நண்பனாகி - என்னையே

     எனக்கு கான்பித்தவள் - என்னவள்

                                                                  என் இனியவள் !!

காதல்_1

இவள் வந்து போனதும் தானா

கவிஞனாய் மலர்ந்தது பேனா

கேள்விகள் தொகுக்குது காணா

நான் என்ன நானே தானா !!


பகல் என்ன இரவும் என்ன

எல்லாமே ஒன்றாய் போக

இரவின்றி பகலும் இல்லை

நீயின்றி நானும் இல்லை !!


வானமும் கொஞ்சம் காதல் கொள்ள

சொட்டும் மழையாய் காதல் சொல்ல

மாலை துளி ஒவ்வொன்றும்

முத்தமாய் மாறி போக !!

Sunday, November 20, 2011

எழுவோம் நாம்!!

நாட்கள் கரைந்தன
  வருடங்கள் தேய்தன  !!

உணர்வுகளை அடக்கி அடக்கி
   எறியும் சினத்தின் வெப்பம்
எரிமலையாய் வெடிக்கும் நாள்ளன்று
    பிறந்திடும் புதிய யுத்தம் !!

சீதையின்பால் ராமன்
   ராமனின்பால் ஹனுமான்
           ஈழனின் பால் நாம் தமிழன் !!

வீழ்ந்துதான் விட்டோம்
           மடிந்துவிடவில்லை !!

Wednesday, April 7, 2010

நிழல்


இருக்கைகளை அலங்கரித்து
அழகிய ஜென்னல் கம்பியில்
மெல்லிய காற்றின் வருடலில்
அலையென கொடிபோல்
ஆடிய துணியினை விலக்கினேன் !!

துணை வரும் நிழல்
இருள் கண்டதுபோல்
தொலைவினில் அவன் ஆடையின்றி
புல் உடுத்தி அமர்ந்திருந்த இயற்கையின் மடியினில்
வாழ வழிதேடி விழியில் உறவைத்தேடி -
இன்னும் இலங்கையில் உதவிக்காக !!!

வாய்புகள்


வரிக்குதிரை வேட்டையாட
நரிக்குறவன் எய்த அம்பு
பதறாமல் மேய்ந்திருந்த மானின் மேல்பாய
சிதறாமல் சிதறி திசையெங்கும் ஓடிய மான்கூட்டம்
இரைதேடி வெறியோடு வெளிவந்த புலிக்கு
இரையாக மாறியது -
சரியாக பதம் பார்க்க தவறிய வாய்பு !!

மறையாத சூரியன் மலையோரம் மறைவதற்குள்
மலராகும் மொட்டுக்களின் வாய்பு !!

என வாய்த்திடும் வாய்புகள் - நம்
வாசலில் காத்திருகாதது !!!

Saturday, March 6, 2010

இதோ இதோ இன்டெர்வியு கூத்து

இதோ இதோ இன்டெர்வியு கூத்து
தினோ தினோ வேலையில நொந்து நூடில்ஸ் ஆகி
மாசம் பொறந்தா வாங்கற சம்பளத்த பாத்து
வெந்து போய் நானும்
பல முதலைக்கு அனுப்பி வெச்சேன் ஜாதகத்த

இடை தரகர் பாத்துபுட்டு
மெயில்ல போட்டான் காண்ட்ராக்ட் ஜாப்கு
அட கன்சல்டன்சி பசங்களா
நான் தேடுறது பெர்மனென்ட் ஜாப்டான்னு அனுப்பி வெச்சேன் ரிப்லைல

தேதி சொல்லி மெயில்வரும் இன்டெர்வியுக்கு
சொல்லாமலே தடைகள் வரும் அட்டன்பன்ன
தக்கி முக்கி ஓடி போய் அட்டன் பண்ணி முடிச்சப்பறம்
குதரை முதலாளி வந்து சொல்லுவா பாரு
வி நீட் யு டு சாயன் வித் அஸ் வித்தின் 2 வீக்ஸ்

எங்க கம்பெனி துபாய் குதரைய
ரெண்டு மாசம் கணக்கு காட்டாம
புல்லு கட்டி மேய்க்க முடியாதுன்னு
மல்லு கட்டி சொன்னாலும் – ரெக்கார்ட் பண்ணிவெச்சாப்ல
ஒர்ரே டயலாக் பேசிடுவா டுபாகுறு

காசு கொஞ்சம் இருந்தாக்கா
பிஸ்நஸ்ல எறங்கிக்கலாம்
அப்துல் கலாம் வந்து திறந்து வெய்க்காட்டாலும்
பொட்டிகடை வெச்சு போலச்சுக்கலாம்
மானகெட்ட ஐடில வேலசெயறது கஷ்டம்டா

இப்டி பொலம்பி பொலம்பி நாட்கள் நகர
உருபடியா எதையும் யோசிக்கமா ஓடுது வாழ்க்கை
எந்த கப்பல பிடிக்கநுதான் தெரியல

Wednesday, February 24, 2010

அண்ணன்


ஒரு துளியாய் ஒரு விதையாய்
என் நிழலாய் என்னோடு தொடர்கின்றவன்
என்முன்னே பிறந்திட்டான்
அவன் உயிராய் காதிட்டான் !!

அடித்து விளையாடி
திட்டி உரையாடி
அழுது அடம்பிடித்து
நான் ஜெயித்திடும் விளையாட்டில்
சலிக்காமல் தோற்று
தோல்வியில் வெற்றி காணும் ஒரு ஜீவன்!!

நான் செய்திடும் குறும்புகளை
அன்னை இடம் முறையிடுவான்
அன்னை வந்து முறைத்திடுவாள்
தந்திரமாய் வலைபின்னி
நானோ தந்தை கை நாடிடுவேன் !!

இத்தனை முறை நான் ஜெயித்திட
அண்ணன் அவன் தோள்தந்தான்
இல்லமதில் நான் நானாக
பிரதி பலிக்கும் நண்பனானான்
நான் நடக்கும் பாதை தனில்
முள்ளகற்றும் சகோதரன்
என் அண்ணன் !!

Monday, February 15, 2010

Gift From God



When I see myself within my heart
It beats with your lovely thought
When I search the meaning of my life
It begins with your smile as our life -
Where I can see myself as I am

You are my sky when I rise
You are my earth when I fall
You are my breath – and
You are my dream for what I born

To explore life with love
To explain the worth of birth
To know the pain and gain – and
To feel it from heart – I felt it by you
Not just to hold the hands – but
To share the life and time till I breathe

The days passed in search of hands
Not for help but to share - And
Take me as I am - With all my dreams
God give you for all what I wants my sweet heart

Thanks not an enough word… a gift from god
Which I can’t find any were except in my heart.

Thursday, September 17, 2009

‘அப்பா’



நான் மண்ணில் கண்மலர
என் தாயின் பொன்முகத்தில்
சிந்தும் பொன்சிரிப்பின் சொந்தமாய்
தாயின் மருமுகமாய் தந்தை என்று
இருவரும் ஒரு உருவாய் என் முன்னே
தோன்றிடும் சிவசக்தி !!!

சுடும் நெருபென்று கூரி
புத்திக்கு படும் முறைதனில்
பாடம் பயில்வித்த பண்டிதர் !!!

காற்றின் தரம் கண்டு
நீ செல்லும் வழி தன்னில்
இடி கூடிய மழையுண்டு என்று
அறிவுறுத்தும் அனுபவத்தின் அறிவுச்சுடர் !!!

பிள்ளை நான் விழுகின்ற பொது
படும் வலி தனை
அவர் மனதினில் தாங்கி
என் கையுன்றி நான் எழ
தன் கைகளை படியாக்கிடும்
தாய்மையின் மருபெயராம் தந்தை !!!

தவழும் பிள்ளை தனை
தாங்கும் நிலமாக
வளரும் பிள்ளை நான்
நல்வழிகள் அறிந்து நலம்வாழ
துணை நிற்கும் குருவானவர் !!!

‘அப்பா’ கடல்தாண்டிய பின்
வெளி வரும் பெருமூச்சின் ஒரு வார்த்தை
என் ஜீவனில் கலந்து இருக்கும் முதல் வார்த்தை
அன்னையின் செரிபாதியாய் தந்தை – உன்பெருமை
சொல்வதற்கு இல்லை இங்கு வார்த்தை !!!

Wednesday, September 16, 2009

அழகு


சல சல வென ஓடும் நதியினில்
மோதும் அலைகளில் -
பிறக்கும் இசைதனில்
நான் துளைந்தேன் !!!

பறக்கும் மயில் -
இசைக்கும் குயில்
என கவிதைகள் மலரும் பகல்
அதிகாலையில் நான் ரசித்தேன் !!!

நதியின் வளைவினில்
பூக்கும் மலர்களில்
காற்றின் காதலை
பிறக்கும் தென்றலின் -
குளுமையில் நான் உணர்ந்தேன் !!!

எழும் சூரியனில்
விழும் ஒளிதனில்
மலரும் பூக்களின் மனம்தனில்
நான் மலர்ந்தேன் !!!

நதியின் எதிரினில்
நீந்தும் மீன்களின் அசைவினில்
நாட்டியம் நான் பயின்றேன் !!!

Monday, September 14, 2009

காதலி


பாறையின் பிரதிபலிப்பாய் என் இதயம்தனில் -
தண்ணீரின் நாடிதனை காண்பித்தவள் !!
எரிமலையின் சீற்றமாய் என் மூச்சினில் -
தென்றலின் வருடலாய் வசீகரித்தவள் !!
என்னுள் எழுகின்ற தேடல்களின் -
பொக்கிச புதையலாய் விடைதருபவள் !!
என்னுள் என்னுயிராய் என் சுவாசத்தில் கலந்திருப்பவள் -
என் இனிய இதயத்தின் துடிப்பானவள் - என்னவள் !!
என் இனிய காதலி -
மை லிட்டில் ஸ்வீட் ஹார்ட் -!!!

Thursday, August 27, 2009

புதியதாய் பிறந்தேன்


தினம் தினம் காலை
கண் திறக்கும் வேளை
புதிதாய் தான் பிறந்தேன் !!!

விடை பெற்று சென்ற சிரிப்பினை
விலை கொடுத்து வாங்கி
வழிய சிரிக்கும் வேலையாய் ஐ.டி !!!

மனிதன் எனும் போர்வையில்
மலரும் இயந்திரமாய்
குடும்ப சூழலிற்காக
வாசமற்ற மலர்களாய் !!!

என்றாவது நம் வாழ்கையிலும்
விடியலாய் நாட்கள் வரும்
என்ற தொலைநோக்கு பார்வையில்
துளைந்திடும் ப்ரொபெஸ்நல்ஸ் !!!

இதுவும் கடந்து போகும்
என்ற வாக்கியத்தை ஓடவிட்டு
வாழ்கையின் ஓட்டமும் தொடர்கிறது
வினாக்களின் விடையும் தொடர்கதையாய்
முடிவின்றி எடை கூடி தான் சுமக்கிறோம் !!!

முடிவில் படுக்கையில் என் பிராத்தனை
இறைவா மரண வரம்தா !!
இறந்தேன் அணைத்து வழிகளும் புதைய
மீண்டும் பிறந்தேன் மறுமுறை - புதிதாய்
வாழ்கை பயணத்தில் தொடர்கின்றேன்
மறுமுறை எழாத மரணம் வரும் வரை
தேடல்களோடே ஒவ்வொரு நாளும்
புதியதாய் தான் பிறந்தேன் !!!

Friday, August 14, 2009

சுதந்திர திருநாள்


தாகம் துறந்து -
தியாகம் செய்து
ஜீவன் சுமந்து -
ஜீரணித்த நாட்கள் !!

உயிரும் துட்சமாய்
பிறப்பினை பயிரிட்டு -
இறப்பினை சுதந்திர பாலாக்கி
விழுந்த விதைகளின் -
சுதந்திர விருச்சத்திற்கும் !!

நிழல் நாடி நாம் செல்ல
நிஜமான இந்திய மண்ணிற்கும்!!

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
என்ற சொல்லிற்கு கனியாய் கனிந்து
அமுதாய் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கும் !!

மனதார உணர்வுகள் உள்ளம் மகிழ
எழுந்த திருநாளாம் சுதந்திர திருநாள் !!

தாய் தந்த பாலிற்கும்
தாய்நாடிட்ட சோற்றுக்கும்
கடைசி மூச்சில்
எரியும் நொடி வரை
என்றும் நன்றி கலந்தே இருக்கும் !!

Wednesday, August 12, 2009

நிழல் நாட்கள்


நினைவுகள் சுமந்தேன்
நிஜவுலக கனவுகளாய்
கற்பனை குதிரைதனில்
தொலைந்தன நாட்கள்
கண்ணிற்கு அந்நியனாகி சிந்திய கண்ணீர்
கருவறை திரும்ப ஏங்கும் உள்ளம்
மறுமுறை பிறந்து செய்திட்ட தவறினை
தடம் புரண்ட பாதைதனை
இடம் பெயர்த்து நல்வழிநடத்த
உடலுக்கு அந்நியனாகா உயிரை உரசி
தீயாய் தீமை அழித்திட
நன்மை பெருகிட
நல்லோர் வாழ்த்திட
நானும் வாழ வழி தேடி
என்னையே தோண்டி தோண்டி
மாயப்பூட்டின் சாவி தன்னை
என்னுள்ளும் தேடி தேடி திரிகின்றேன்
உறை உடைத்து புதிய
வண்ணத்து பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
நினைவுகள் சுமந்தேன்

Tuesday, August 11, 2009

நட்சத்திரம்


படர்ந்த வானத்தின்
சிறந்த கோலத்தில்
வரைந்த மாற்றத்தின்
இரவு நேரத்தில் மலர்ந்தவன் !!!

இருளை அலங்கரித்து
ஒளியாய் இருள் அகற்றி
கவிக்கு விருந்தளித்த
கோலத்தின் புள்ளியாய் ஜொலிப்பவன் !!!

வானின் உயரம் தன்னை
மானிடர் கண்டிட -
மெய்பித்து காட்டிடும்
வான் வரைந்த ஓவியமாய்
மேகத்தின் ஊடே
கண் நிறைந்த காவியமாய்
கவியின் ஊடே
வான் நிறைந்து நிற்கும் - நட்சத்திரம் !!!

Tuesday, August 4, 2009

Rakshabandhan


The day has blessed -
To bridge with you
The time has passed -
With smiles on you!!

I found my heart -
Blessing with god
One as brother - and
The other as sister
This day has special -
That is not in other
Rather then ever -
I care being together
With the lovely weather -
And the relation as power!!

The day has come -
Remains the same
Love the life
Live with your - lovely
Beings together!!

Monday, August 3, 2009

நண்பன்


பூக்களும் முர்க்களுமாய்
தென்றலும் கவிதையுமாய்
நெடுந்தூர பயணத்தில்
கானல் நீர் கண்டு -
கண்ணில் நீர் கொண்டு
தள்ளாடி நான் சாய்கையில்
ஆலமர நிழலாய் என் நண்பனின் தோள் !!

துயரங்கள் மாறவில்லை
புறமுதுகு புண்கள் மறையவில்லை
கண்ணில் நான் கொண்ட நீர் மட்டும்
காற்றோடு கறைந்து போனதே - நண்பா
உன்கரம் எனக்காக நீண்டபோது !!

இன்றும் யுத்த களத்தில்
விட்ட மூச்சு விட்டதாகும் வரை
மாறாத நட்போடு மறையாத அன்போடு
வந்த பாதை மறவாமல் -
வரும் பாதை எதிர்நோக்கி
நிகழ் பாதை நிஜமாய் -
நிழலாய் நம் நட்போடே
நடைபோடும் எடை இல்லா நட்பு !!

Sunday, August 2, 2009

Live Your Life


Life is not a war
To fight with sword
The chances are rare
Utilize it before it is far!!!

Day gets Light – when
The sun rise
Life gets light – when
Your soul rise!!!

Feel your birth
To make it worth
Life is to live
Live it with love!!!

பூ


இடித்து விழுந்தான் இடியவன்
மண்ணில் புதைந்தான் மழையவன் -
புதைந்தவன் எழுந்தான் செடியாக
செடியவள் பெற்றால் பூக்களாக !!

பூஞ்சோலை சாலை ஓரம்
இக்காட்சி நடந்தேற - சோலையோர
தென்றல் வந்து சொன்னது
எந்தன் காதின் ஓரம் !!

Thursday, July 30, 2009

அம்மா


அன்பினால் பெற்று எடுத்தால்
அன்பின் தலைவியவள்
அன்னை என்று பெயர் கொண்டாள் !!!

பல வண்ண கணவுகள் சுமந்து
பசுமை எதிர்பார்ப்பில் நிறைந்து
மலர்கின்ற மொட்டவன் தூய எண்ணத்தால் -
சிறகு விரித்து உயர உயர பறந்திட
நிலவினை காட்டியே உணவிட்டாள் !!!

பண்பில் சிறந்தவள்
அன்பில் தூயவள்
அன்னை என்ற உணர்வுதன்னில்
தன் ஜீவன் தியாகம் செய்பவள் !!!
இறைவன் என்றே என் உள்ளம்
பூஜை செய்திடும் தாயவள் !!!

அம்மா என்ற தமிழ்
மெய்சிலிர்த்திடும் பொருள் !!!
வெறும் வார்த்தை அல்ல
வேரின் அர்த்தமாய் - உயிரின் உண்மையாய்
என் தாயின் தவம் !!!

தசை யாடும் உறவு



பிறை சூடி கவிபாடி -
எழுகின்ற தமிழர் கோடி
அதன் ஆழம் தோண்டி -
திசை எட்டும் முரசடி !!
உண்மை உணர்த்திட -
உயர்த்திடு போர்க்கொடி !!

என்னவன் என்ற போதும்
வேற்றவன் என்று கூறி -
வேடர்கள் வேட்டையாட
வேடிக்கை பார்த்துநிற்கும் -
வேதனை நிர்வாணத்தால்
நிர்முலமாகி நிற்கும் என்சார் தமிழன் !!
இலங்கையில் இறந்தபின்னும்
பிறப்பெடுத்த அவசியமென்ன ?

பிறப்பெடுத்து மண்தொட்ட போதே -
உறை வாளெடுத்து போரிட்ட தமிழன் !!
சிறைப்பட்ட பின்னும் உறுமி -
குரல் கொடுத்த கலைஞன் !!
இனம் என்ற போதே
சினம் கொண்டு சீறி -
எழுகின்ற இளைஞன் !!
உரிமை குரல் கொடுத்து -
உணர்வினை முடிக்கிவிடும் கலைஞன் !!
என அனைவரும் அணிவகுத்து நின்றும்
நரியின் சத்தத்தில் சிங்கம் தோற்றிட்டதோ !!

திசை மாறிய போதும்
தசை யாடும் உறவு -
தள்ளாடி போனதால்
தாலாட்டு துலைந்து போனதே !!
இடுகாடு நிறைந்து போனதே !!

இயற்றிட்ட வார்த்தையின்பால்
நான் கொண்ட நட்பின் பசி -
இனி இறைதேடி கவிபாடும்
ஒரு கவிஞனாய் என் போர்க்கொடி !!!

Sunday, July 26, 2009

Little Sweet heart


I had a flower -A
Beautiful flower
It has the color - With
My own flavor
Seeing it in morning -A
Beautiful mind blowing
Disappeared in the wind - And
Disclosed in my mind – Still
Appear in my soul

A lonely thought
Disturbed a lot – In
The next morning walk
I saw the flower – In
The same flavor
I love the flower – A
Beautiful flower

Flowers may disappear
But the fragrance – remains
Like a beautiful heart – Still
I had a lot in my walk

Lovely memories - My
Little Sweet heart

Wednesday, July 22, 2009

A Cry to Fly


I cry to fly – With
Tones of colors
Thrown out in wings
Turn to fly – With
The name butterfly
I cry to fly

I cry to fly – with
The wings grown big – And
The color turned unique
With the eye of eagle – To
Fly in the sky – Without
The limit as sky
I cry to fly

A modern art – With
The wings as gold
I have never try – set
With the newer path
I love to fly – like
A dragon heart
I cry to fly.

Tuesday, July 21, 2009

புதிய முகம்


மேகமே வானமாக - தென்றலின்
தழுவலில் நகர்ந்த மேகத்தின் ஊடே
வானின் கண்களாய் நட்சத்திரங்கள் !!!

சற்று மிதமான அமைதியை -
அலங்கோலமாக்கிய கதரல் சத்தம் !!!

வெடிக்கின்ற யுத்தத்தில் வெடித்துச்சிதறிய
புகையே அங்கு மேகம் போல் காட்சிதர -
புகையின் ஊடே துப்பாக்கி குண்டுகள்
நட்சத்திர ஒளியோடு உயிரினை பதம்பார்க்க !!!

புயலுக்குப்பின் அமைதியாய் - அலங்கோலமான
என் ஈழத்தமிழன் கதரல் சத்தம் !!!

உண்மை நிலையறியாமல் யுத்தத்தை
அரசியல் யுக்தியால் மறைத்த கொடுமை
இறந்த என்னவர் உணரக்கூடுமோ -
உண்மை ஊமையாகுமோ !!!

பிறந்த போதே இறக்க
கையொப்பம்மிட்டே பிறந்தோம் -
தோழா அடிமையெனில்
இனி பிறக்க யாவரும் மறப்போம் !!!

உண்மையின் கீதம் சற்று
ஊமையும் ஆகும் - இருந்த போதும்
உரிமை கீதம் ஊமையாக்கா வண்ணம்
மீண்டும் மலரும் புதிய முகம் -
முகமூடி அகற்ற படும் !!!

ருத்ரம்


அங்கம் நடுநடுங்க -
நெஞ்சம் படபடக்க -
என்னுள் இருந்தவன் -
வெளிவந்தான் !!

என் எதிரே நின்றவரும் -
துரோகம் இளைத்தவரும் -
விழிகள் பிதுங்கி - ஓடி
ஒழிகின்றார் !!

யுத்தம் வளர்ப்பதில் -
நித்தம் தயங்கியே -
தாமரை இலை நீர் - போல்
நின்றேன் !!

பொறுத்த தீப்பொறி -
பொறுமை துறந்ததால் -
வெடிக்கும் எரிமலையாய் -
வந்தேன் !!

ருத்ரன் நான் வந்தேன் !!

Monday, July 20, 2009

யமுனை


யமுனை நதியோடு
ஒத்த நிலைபாடு
கொண்ட பெண்ணவளே !!

நீ நித்தம் சலிக்காமல்
ஓடும் ஓட்டத்தில்
புனிதம் பெற்றிடாய் !!

படர்ந்த எண்ணத்தில்
வழிகள் அத்தனையும்
பூஞ்சோலை ஆக்கிட்டாய் !!

பகிர்ந்து வாழ்வதில்
பகைவர்தம் கூட
நண்பர் என வந்தார் !!

தமிழன் கோட்பாட்டை
வாழ்கை நெறியாக்கி
பண்பின் அறம் நின்றாய் !!

மழலை


சின்ன விழி மூடி
தென்றல் கவிபாடி
அன்னை கரம் தொட்டு
தந்தை மனதோடு தூங்கும்
என் செல்வமே !!

நீ கொஞ்சும் மொழி பேசி
பூவின் இதழ் சிறித்து -
சிந்தும் சிறிப்போடு
உள்ளம் கொள்ளை போனதே!!

தந்தை தோல் மீது
அன்ன நடையிட்டு
பிஞ்சு கால் செல்ல
நெஞ்சம் நெகிழ்கின்றதே !!

கவிகள் பல கோடி
மழலை உனைப்பாடி
வரிகள் பல கோடி -
இயற்ற முடியாமல்
தொடரும் கவிப்பாடலே !!

உன்னை பெற்றதால் - பெற்றிட்டேன்
வாழ்வின் அர்த்தங்களை !!

Sunday, July 19, 2009

தேடல்


என் தோல்விப் படிக்கட்டுகளின் -
மேல் ஏறிக்கொண்டே !!
பற்றியும் எறிந்துவிட்டேன் -
பற்றின்றியும் திரிந்துவிட்டேன் !!!

வற்றிய நதியின் -
வரலாற்று சுவடுகளாய் !!
என் வரண்ட இதயத்திற்கு -
ஒரு சொட்டு தண்ணீர் தேடி !!!

கர்வம்


வெற்றி கணிமேல் எய்திட்ட அம்பு
தவறாமல் தோல்வி கனிகளை -
தொட்டே திரும்பியது !!
எய்திட்ட பெருவிரல் சற்று -
வலைய மறுப்பதினால் !!

துளிகள்


பெற்றவள் கண்ணீர் துளியில்
மூழ்கிய என் காதல் கனிக்கு
என்னவள் இட்ட பெயர் வேஷம் !!

பெற்றவள் விடுத்த சொல்லில்
கொற்றவன் ஒளிந்து நிற்க -
என்னவள் துளைத்த அம்பில்
துளைந்து போனதென் அன்பின் பாசம் !!

இன்று பெற்றவளும் என்னவளும்
சிரித்திருக்க நான் மறைத்திருப்பது
என் கண்ணின் கணீர் துளிகளை !!

NEW


The day I have born -
My world was new!!
The day I knew my parents -
My birth was new!!
The day I knew my friends -
My life was new!!
The day I knew my love -
My heart was new!!
The day I knew myself -
I found myself new!!

Friday, July 17, 2009

துரோகம்


அத்தான் என்றால் அரவணைத்தேன் -
இரு கரம் கொண்டு !!

தள்ளாடும் நேரத்தில் தாலி வரம் கேட்டாள்
கடமை கருத்தூன்றி நின்றதால் -
காலம் வரக் காத்திருப்போம் என்றேன் !!

எரியும் தீயில் நெய்யூற்றி யாகம் வளர்த்து
வேற்றவன் தாலிக்கு சொந்தமாகி -
தியாகம் என்று பெயரிட்டாய் !!

Thursday, July 16, 2009

நெரிசல்


அதிகாலை சூரியன் கண்விழித்த வேலை
புள்ளி மானெனத் துள்ளி !!

அள்ளி முடிந்த கூந்தல் அவிழ்த்து
அன்னை கரம் கொண்டு பின்னி !!
அண்ணம் ஒருபிடி நிலவில்லா
நிலா சோறென உண்டு !!

கலையாத ஆடை உடுத்தி
விரைவாய் கால் நடை பயணித்து !!
பயமின்றி பயணிக்க பயணசீட்டோடு
நெரிசல் மிகுந்த பேருந்தில் !!

உள் சென்று வெளிவந்தேன்
கசக்கி போட்ட ஆடையாய் !!

Wednesday, July 15, 2009

இயலாமை


கடற்கரை காற்றை சுவாசித்த வண்ணம்
சிந்தனை கடலில் மூழ்கிய போது !!

செவியில் கேட்டது ஒரு குரல்
பள்ளி கூடத்தில் - பாடம்
பயிலும் வயதில் - வாழ்கை
சக்கரத்தில் வேலை பயில்கிறான்!!

இவன் கிழிந்த ஆடைகளை - களைத்து
புதிய சீறுடை புகுத்தி - பள்ளியில்
அமர்த்திட நெஞ்சம் துடிதிட்டது - இருப்பினும்
சீறன சக்தி குறைந்த போதும் - சுண்டல்
ருபாய் ஜந்துக்கு வாங்கிய - கையோடு
மட்டும் நான் !!

இயலாமை கயிற்றில் தூக்கு தண்டனை!!

இன்னும் ஒரு தாயாக


பொன்நகை வாங்கி -
பொல்லாத பொன்னிறத்தாள் !
மேனிமுழுதும் அலங்கரித்து - அழகு
பார்த்திட எண்ணம் கொண்டேன் !!

அவள் சின்னஞ்சிறு உதடு அசைத்த -
சிரிப்பினில் !!

புன்னகை என்னோடு நிலைத்திருக்க -
பொன்நகை எதற்கு என்று - என்னை
ஆற தழுவி அரவணைத்தாள்!
இன்னும் ஒரு தாயாக - நானோ
ஒரு சேயாக !!

பேருந்து

பேர் அரியா பலர் கொண்டு -
போர் இல்லா யுத்தம் ஒன்று !!

நித்தம் நித்தம் சுழன்று வந்த -
பூமி பந்தில் !!

சத்தம் சற்றும் சோர்வடையா -
பேருந்தில் !!

சோர்வடைவர் பயணித்த பயணியர்தம் !!!

வெறுமை



திறந்த வெளியில் -
நிறைந்த வெப்பத்தில் !!

உதிர்ந்த இலைகளோடு -
காய்ந்த கைகளாய் !!

வான் பார்த்து -
நிற்கும் மரம் !!

நிலா கால மழை


சின்ன சின்ன கனவுகள் சுமந்து
மனம் முழுதும் கோட்டைகள் கட்டி!
குடிபெயரும் நாள் அன்று -
குத்துவிளக்கு ஏற்றி வரவேற்பதுபோல் !!

வானத்து வெண்ணிலா வரவேற்க்க -
வானவன் கட்டிய கோட்டையில் !
குடிபெயர்ந்தான் மழைமேகம் -
இடி மின்னல் வாத்தியம் முழங்க !!

சொல்லாமல்


தென்றல் சுமந்து வந்த -
பூவை !
மெல்லத் தாங்கி -
கையில் பெற்றேன் !!

சொல்லத் தயங்கி நின்ற -
வார்த்தை !
செல்லச் சிரிப்பில் சிறை பிடித்த -
பெண்ணே !!
சொல்லத் துணிந்து -
நானும் வந்தேன் !
சொல்லாமல் கடந்து -
சென்றேன் !!

சொட்டும் கண்ணீர் வாழ்த்தி -
நின்றேன் !
செல்வச் செழிப்புடன் நடந்தேறிய -
உன் திருமணத்தில்!!!

உருகுதடி


விழி வழி காதல் சொல்லி
செவி வழி மொழி பெயர்த்து
மூளையின் முதுகு எலும்பை -
உடைத்துவிட்டதால்!!

நீ எட்டி நின்று உறவை -
உடைத்தபோதும்!!

வாட்டி எடுக்கும் வார்த்தையால் -
சுட்டபோதும்!!

வாடாமல் உன் நினைவு நிலைகுதடி
கண் மூடாமல் என் உயிரும் உருகுதடி!!!

பயணம்


அதி காலை கண் விழித்த வேளை
என்னுள் படர்ந்த இன்பம்
அதை சொல்லவே இந்த பயணம்!!

உள் வாங்கிய மூச்சில் குளுமை அதிகம்
என் உள்ளத்தில் எழுந்த வாக்கியங்களும் -
அதில் அடங்கும்!!

வெளிப்புற தென்றல் என் தலைமுடியினை -
காதலோடு கோதிச்செல்ல !
கமலமாய் மலர்ந்த கண்கள் -
போதையில் தள்ளாட !
வண்ணத்து பூச்சியின் நடன அரங்கேற்றம்
கண்முன்னே ஆனந்தமாய்!!

வானின் விருந்திற்கு மேகங்கள் எல்லாம் -
வேகமாய் செல்ல !
ஒவ்வொரு நிமிடமும் பல கோலங்கள் -
வானவேடிகையாக !
நிகழ்ந்த மாற்றத்தின் அற்புத படைப்பாய் -
மழையவள் தூறிட்டாள் l!!

உச்சகட்ட அழகிய காட்சி -
பூமித்தாய் நிகழ்திட்டாள் !
மண்ணில் இருந்து -
பிறந்த வாசம் !
மன்னவள் ஈன்று எடுத்த -
பிள்ளை பாசம் !
என்னுளும் பயணித்த -
இன்ப வாசம்!!

நிலை மறந்த என்னை - நான்
உணர்ந்திட !
இடியவன் இடித்திடான் -
உணர்வினை மீட்டு எடுத்தான் !
இனிய நினைவுகள் -
உள்ளம் மகிழ!!

Tuesday, July 14, 2009

சாதி


தீண்டும் பாம்பின் விஷமும்
இவன் சுவாசம் நேசம் கொல்லும்!
பார்வை படர்கின்ற பக்கம்
அழுகை சத்தத்தின் யுத்தம்!!

விதியையும் வெல்லும் மதியை
மயக்கும் மாயை இருளை நீக்கிடு
மதியாமல் மிதிக்கும் கால்களை களையெடு!!

எழுதுகோல் கொண்டு உரைத்தோம்
மனிதா ஊன்றுகோல் என்றும் உன்னை
ஊமையாக்கி விடும் தோழா!!

சிறு வட்டத்தை உடைத்து வாடா
மனித குலம் என்று வாடா
விழுகின்ற போதும் மண்ணில்
சாதி வேர் அறுத்து போடா!

சுமை


நினைவுகள் சிலுவைகளாக அல்ல
சுமப்பதற்கு!
சுவையாக நிற்பதினால் சுவைகின்றேன்
அனுதினமும் அனுவனுவாய்!

நினைவுகள்!


எரியும் சுடரின்
திரியாய் நாட்கள்
சுடராய் நினைவுகள்!

மறக்கமுடியவில்லை!


தேன் கூட்டின் தேனீக்களாய்
பறந்து திரிந்து வாழ்ந்ததொரு பொற்காலம்!
வானவன் விருந்திற்கு
மன்னவள் சமைத்திடும் மண்வாசம்!
மழையில் ஆடிடும் பிள்ளைகளை
ஓடிவந்து அரவனைக்கும் தாயின் பாசம்!
உச்சி வெயில் சூரியனில்
குச்சி ஐஸுக்கு கை நீட்டி நிற்கும் நேரம்!
இப்படி எத்தனையோ இன்னும் மனதில் மறக்கமுடியவில்லை!