Tuesday, July 21, 2009
புதிய முகம்
மேகமே வானமாக - தென்றலின்
தழுவலில் நகர்ந்த மேகத்தின் ஊடே
வானின் கண்களாய் நட்சத்திரங்கள் !!!
சற்று மிதமான அமைதியை -
அலங்கோலமாக்கிய கதரல் சத்தம் !!!
வெடிக்கின்ற யுத்தத்தில் வெடித்துச்சிதறிய
புகையே அங்கு மேகம் போல் காட்சிதர -
புகையின் ஊடே துப்பாக்கி குண்டுகள்
நட்சத்திர ஒளியோடு உயிரினை பதம்பார்க்க !!!
புயலுக்குப்பின் அமைதியாய் - அலங்கோலமான
என் ஈழத்தமிழன் கதரல் சத்தம் !!!
உண்மை நிலையறியாமல் யுத்தத்தை
அரசியல் யுக்தியால் மறைத்த கொடுமை
இறந்த என்னவர் உணரக்கூடுமோ -
உண்மை ஊமையாகுமோ !!!
பிறந்த போதே இறக்க
கையொப்பம்மிட்டே பிறந்தோம் -
தோழா அடிமையெனில்
இனி பிறக்க யாவரும் மறப்போம் !!!
உண்மையின் கீதம் சற்று
ஊமையும் ஆகும் - இருந்த போதும்
உரிமை கீதம் ஊமையாக்கா வண்ணம்
மீண்டும் மலரும் புதிய முகம் -
முகமூடி அகற்ற படும் !!!
Subscribe to:
Post Comments (Atom)
Unmai.........
ReplyDeleteபிறந்த போதே இறக்க
ReplyDeleteகையொப்பம்மிட்டே பிறந்தோம் -
Really Super da...
Keep on going.....
good one ...:)
ReplyDeletehope dis world will become a better place to live ....
அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்
ReplyDelete