அவள் கற்பின் ஆழம் கண்டு
அவள் அழகிய நெற்றியினில்
நிலைத்து நிற்கும் திலகமிட
நில்லாது துடிக்கிறது என் கை பெருவிரல்
அவள் பிரியமான பார்வை கண்டு
பிரியாமல் அவள் துணையாக
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட
ஏங்குது நெஞ்சம்
இன்னமும் எத்தனை எத்தனை
கனவுகள் நெஞ்சினில் - இத்தனையும்
மொத்தமாய் தேங்கிய நினைவுகளாய் நிற்க
அவள் மட்டும் பேசாமல் சென்று விட்டால்
என் கனவுகளை கொல்லாமல் கொன்று விட்டால்
வழியினில் கலைந்தது
என் தூக்கம் மட்டும் அல்ல
கனவினில் இருந்தும் தான்
நிஜத்தினில் காதல் ????