
தாகம் துறந்து -
தியாகம் செய்து
ஜீவன் சுமந்து -
ஜீரணித்த நாட்கள் !!
உயிரும் துட்சமாய்
பிறப்பினை பயிரிட்டு -
இறப்பினை சுதந்திர பாலாக்கி
விழுந்த விதைகளின் -
சுதந்திர விருச்சத்திற்கும் !!
நிழல் நாடி நாம் செல்ல
நிஜமான இந்திய மண்ணிற்கும்!!
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
என்ற சொல்லிற்கு கனியாய் கனிந்து
அமுதாய் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கும் !!
மனதார உணர்வுகள் உள்ளம் மகிழ
எழுந்த திருநாளாம் சுதந்திர திருநாள் !!
தாய் தந்த பாலிற்கும்
தாய்நாடிட்ட சோற்றுக்கும்
கடைசி மூச்சில்
எரியும் நொடி வரை
என்றும் நன்றி கலந்தே இருக்கும் !!
வாழ்க உன் தமிழ் வளர்க நம் இந்திய
ReplyDeleteAmazing lines.... - Hema
ReplyDeleteதாய் தந்த பாலிற்கும்
தாய்நாடிட்ட சோற்றுக்கும்
கடைசி மூச்சில்
எரியும் நொடி வரை
என்றும் நன்றி கலந்தே இருக்கும் !!
தாய் நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும்
ReplyDeleteபெருமை சேர்க்கும் என்னுயிர் தோழா...
வாழ்க உன் மங்காத தமிழ் புலமை....
வளர்க நம் இந்தியா.....
அன்புடன் அரசு....