
நான் மண்ணில் கண்மலர
என் தாயின் பொன்முகத்தில்
சிந்தும் பொன்சிரிப்பின் சொந்தமாய்
தாயின் மருமுகமாய் தந்தை என்று
இருவரும் ஒரு உருவாய் என் முன்னே
தோன்றிடும் சிவசக்தி !!!
சுடும் நெருபென்று கூரி
புத்திக்கு படும் முறைதனில்
பாடம் பயில்வித்த பண்டிதர் !!!
காற்றின் தரம் கண்டு
நீ செல்லும் வழி தன்னில்
இடி கூடிய மழையுண்டு என்று
அறிவுறுத்தும் அனுபவத்தின் அறிவுச்சுடர் !!!
பிள்ளை நான் விழுகின்ற பொது
படும் வலி தனை
அவர் மனதினில் தாங்கி
என் கையுன்றி நான் எழ
தன் கைகளை படியாக்கிடும்
தாய்மையின் மருபெயராம் தந்தை !!!
தவழும் பிள்ளை தனை
தாங்கும் நிலமாக
வளரும் பிள்ளை நான்
நல்வழிகள் அறிந்து நலம்வாழ
துணை நிற்கும் குருவானவர் !!!
‘அப்பா’ கடல்தாண்டிய பின்
வெளி வரும் பெருமூச்சின் ஒரு வார்த்தை
என் ஜீவனில் கலந்து இருக்கும் முதல் வார்த்தை
அன்னையின் செரிபாதியாய் தந்தை – உன்பெருமை
சொல்வதற்கு இல்லை இங்கு வார்த்தை !!!